மத்திய பட்ஜெட்டை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
ஓசூரில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் மாநகர செயலாளர் மாநகராட்சி மேயர் எஸ்ஏ சத்யா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் மத்திய பட்ஜெட்டிற்கு எதிராகவும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் திமுகவினர் கண்டன கோசங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி