சூளகிரி அருகே வனப்பகுதியில் யானை உள்ள நிலையில் மீண்டும் வெளியே வரலாம் என்பதால் அந்த பகுதி சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு காட்டு யானை தற்போது. சூளகிரி அருகே ஏ. செட்டிப்பள்ளி வனப்பகுதியில் உள்ளது. அந்த யானை காட்டில் இருந்து வெளியேறி கானலட்டி, தாசனபுரம், காவேரிநகர் உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக புகுந்து விடலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். மேலும் பிள்ளைகொத்தூர், ஒட்டர்பாளையம், பண்ணபள்ளி, உள்ளிட்ட பல வழியாக யானை வெளியே வர வாய்ப்புள்ளதால் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
மேலும் யானை பற்றிய தகவல் தெரிந்தால் ஓசூர் வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் யானையை கண்காணிக்க வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்