7. 52 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் எம். எல். ஏ பூமிபூஜை

63பார்த்தது
7. 52 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் எம். எல். ஏ பூமிபூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 7. 52 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் எம். எல். ஏ அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தேன்கனிக்கோட்டை முதல் கெலமங்கலம் வரை ரூ. 1. 50 கோடி சாலை புதுப்பிக்கும் பணி.
தேன்கனிக்கோட்டை முதல் தல்சூர் வரை ரூ. 5. 50 கோடி ஒரு வழி சாலையை அகலப்படுத்தி இருவழி சாலை அமைக்கும் பணி.

பெட்டமுகிலாளம் ஊராட்சியில் ஜெய்புரம்புதூர் முதல் தாசய்யன்கொட்டாய் வரை ரூ. 38 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி.

பெட்டமுகிலாளம் ஊராட்சியில் பெட்டமுகிலாளம் கிராமம் முதல் காளிகட்டம் வரை ரூ. 14 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி.

ஆகிய பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் AD நெடுஞ்சாலைத்துறை, உதவி பொறியாளர், விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் இலகுமையா, ஒன்றிய கவுன்சிலர்கள் சுஜாதா மாரப்பன், சென்னீரப்பா, கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி