கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி வசந்தா(45) இவர்களுக்கு இவர் நேற்று முன்தினம் துணி துவைப்பதற்காக அன்புள்ள கால்வாய்க்கு சென்றார் அங்கு கால் வாயில் விழுந்து திடீரென்று மாயமானார். தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் அங்குள்ள கால்வாயில் தேடிவந்த நிலையில் நேற்று வசந்தா விளங்காமுடி என்ற இடத்தில் கால்வாய் முட்புதரகளில் சடலமாக கிடந்தது. 31 மணி நேரத்திற்கு பின்பு போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.