சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துற்நாற்றம்.

70பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் சாலையில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டி குவிந்து கிடக்கின்றன. அதில் பிளாஸ்டிக் குப்பைகள், துர்நாற்றம் வீசும் கழிவுகளும் உள்ளன. இந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் பரவுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி