பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை

68பார்த்தது
பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை
கிருஷ்ணகிரி மவட்டம் பா்கூா் அருகே உள்ள தனியார் பள்ளியில் போலியாக என். சி. சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடா்பாக சிவராமன் (35) என்பவரை கைது செய்தனா். விசாரணை நடத்தி வந்த நிலையில், சிவராமன் தற்கொலை செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று செப்-19 விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டனா். பாதிக்கப்பட்ட மாணவிகள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ. 5 லட்சமும், மற்றவா்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்க உத்தரவிட்டனா்.

இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 23 மாணவிகள் உள்பட 219 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்பட்டுள்ளது. மேலும் வழக்கின் தற்போதைய நிலை மற்றும் சிவராமன் மரணம் குறித்து விரிவான அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனா்.

தொடர்புடைய செய்தி