கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கு சென்ற 11 வயது மாணவர்கள் இருவர் திடீரென காலை 10 மணிக்கே ஸ்கூல் பேக் இல்லாமல் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். இதனையடுத்து தங்களை ஒரு காரில் கடத்திய சிலர், மயக்க மருந்து கொடுத்ததாகவும், தவறாக கடத்தியதாக கூறி பின்னர் விட்டுவிட்டதாகவும் கூறினார்கள். மாணவர்களின் இந்த தகவல் குறித்து போலீசுக்கு சந்தேகம் ஏற்பட, மாணவர்களிடம் துருவி துருவி விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. ஹோம் ஒர்க் பண்ணாததால், தண்டனையில் இருந்து தப்பிக்க இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.