பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்

81பார்த்தது
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி