அல்ஜசீரா ஊடகத்தில் காசா போரின் கள நிலவரத்தை பற்றி செய்தி சேகரிக்கும் வைல் அல்-தஹ்துத் என்ற ஊடகவியலாளரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் சில மாதங்களுக்கு ,முன் கொல்லப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் தற்போது கத்தாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் மீண்டும் பத்திரிக்கைத்துறைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரது தியாகத்தை போற்றும் வகையில் இந்த ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேரள அரசு அஅவருக்கு அறிவித்துள்ளது.