கள்ளத்தனமாக மாட்டு சந்தையால் உள்ளிருப்பு போராட்டம்

562பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியம் பொருந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னரெட்டியப்பட்டியில் கள்ளத்தனமாக கடந்த 4 வாரமாக மாட்டு சந்தை நடத்துவதாக கூறி தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் மணப்பாறை மாட்டு சந்தை ஏலம் எடுத்தோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சார்பில் நடந்த மாட்டுச் சந்தையில் சந்திரசேகர் என்பவர் ரூ. 2 கோடியே 26 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். அப்போது ஏற்கனவே பல ஆண்டுகளாக ஏலம் எடுத்து வந்த செவலூர் பகுதியைச் சேர்ந்த சின்னாகவுண்டர் என்பவர் கரூர் மாவட்டம் சின்னரெட்டியபட்டி பகுதியில் கள்ளத்தனமாக சுமார் 3 ஏக்கர் நிலத்தில் மாட்டு சந்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டு சந்தை ஏலம் எடுத்த சந்திரசேகர் தரப்பினர் அனுமதி இன்றி நடத்தப்படும் சந்தையால் தங்கள் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக ஏற்பட்டுள்ளதால் நஷ்டம் ஏற்படுவதாக பலமுறை தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி