கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்

73பார்த்தது
கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்
கேரளாவில் 10 பேருக்கு 'நைல் காய்ச்சல்' பாதித்து உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சேகரித்த மாதிரி பரிசோதனைக்காக புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் நைல் காய்ச்சல் என்பது உறுதியானது. 10 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 79 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கேரள மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிர தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி