கரூர்: சாலை பணியாளர்கள் சங்கம் கையெழுத்து இயக்கம்

72பார்த்தது
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 28 வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ திரும்ப பெற வேண்டும்,  சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிர்வாகித்து பராமரித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை நேற்று வழங்கி எடுத்துரைத்து கையெழுத்து பெறப்பட்டது. வரும் மார்ச் 26 அன்று கையெழுத்து பிரதிகளுடன் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை சாசனம் வழங்கும் இயக்கம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி