9 மாத குழந்தையுடன் தாய் மாயம்

952பார்த்தது
9 மாத குழந்தையுடன் தாய் மாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சி ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சீரங்கன் (37). இவருக்கு திருமணம் ஆகி பாக்கியலட்சுமி என்ற மனைவி மற்றும் லிவிக்கா என்ற 9 மாத குழந்தை உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி தனது குழந்தையுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி