கரூர் மாவட்டம் குளித்தலை சின்ன ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விஜயகுமார் (32). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதனையடுத்து இன்று காலை இராஜேந்திரம் தென்கரை வாய்க்காலில் உள்ள பாலத்தில் இவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.