முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற்ற உத்தரவையும் ரத்து செய்துள்ளார்.