தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இருப்பினும் பெண்களுக்கு பயண டிக்கெட் வழங்கப்படுகிறது. இதை மகளிர் கட்டாயம் வாங்க வேண்டும். இலவசம் தானே என்று டிக்கெட் வாங்காமல் அலட்சியமாக இருத்தல் கூடாது. திருப்பூரில் பெண் ஒருவர் டிக்கெட் வாங்காமல் பயணித்துள்ளார். அவர் நிறுத்ததில் இறங்கியபோது பரிசோதகர் அவரை சோதித்து, டிக்கெட் வாங்காத காரணத்திற்காக ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.