குளித்தலை: அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

69பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தனியார் மண்டபத்தில் அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் இன்று (அக்.,23) நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவபதி, தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், திமுகவில் இருக்கிற சாதாரண தொண்டன் கூட மீண்டும் திமுக வரக்கூடாது அண்ணா திமுக தான் வர வேண்டும் எடப்பாடி தான் வர வேண்டும் அந்த அளவிற்கு அவர்களுக்கு அதிருப்தியாக உள்ளது.

எடப்பாடி ஆட்சி காலத்தில் வீட்டு வரியோ, குடிநீர் வரியோ, மின்கட்டண உயர்வோ ஏற்படவில்லை. அம்மா ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முறியடித்து விட்டார்கள் வேலைக்கு செல்லும் கிராமப்புற பெண்களுக்கு மானிய வழியில் கூட்டி வழங்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேருந்து இலவசம் என கூறி 4 இலவச பேருந்துகள் இயக்கி தற்போது 2 இலவச பேருந்துகள் மட்டுமே ஓடுகிறது. இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டத்தையும் நிறுத்திவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டங்களிலும் இல்லாத இந்த கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் எந்த ஒரு பொதுக்கூட்டமோ ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்த முடியாது அனுமதி மறுக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

தொடர்புடைய செய்தி