கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குளித்தலை நீர்வளத் துறையை கண்டித்து அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் குளித்தலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் விவசாயிகளை தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்திய குளித்தலை நீர்வளத்துறை எஸ்டிஓ கோபி கிருஷ்ணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், கடைமடை பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும், மாயனூரில் இருந்து தாயினொரு வரை நிதி ஒதுக்கீடு மூலம் வாய்க்கால் அமைப்பு செய்தும், கடைமடையில் நாற்றுக் கூட போட முடியாமல் பாலைவனமாகவும் இடங்களை ஆய்வு செய்யாத அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.