கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பேரூர் to சிங்கப்பூர் செல்லும் சாலையின் வலது புறம் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இவ்வழியே பேரூர் வரை அதிகப்படியான இடங்களில் குழாய்கள் அடிக்கடி வெடிப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று குழாயில் வெடிப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதுடன், தண்ணீர் மேல் நோக்கி பீய்ச்சு அடிப்பதால் மேலே செல்லும் மின்சார கம்பியில் பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுக்காம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.