கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் செயல் அலுவலர் பானு ஜெயராணி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். தொடர்ந்து அலுவலக இளநிலை உதவியாளர் சரவணகுமார் மாவட்ட நிர்வாகத்தால் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட முத்தான மூன்று திட்டங்கள், நிமிர்ந்து நில் துணிந்து சொல், இளந்தளிர் இல்லம், அகல் விளக்கு, பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு ஆகிய திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
தொடர்ந்து ஆதிநத்தம் மருதூர் பணிக்கம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீதா விஜயலட்சுமி ராமகிருஷ்ணன். கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், விஜயா, கோவர்த்தனா, சுகாதார ஆய்வாளர் ராஜா, கவுன்சிலரும் திட்டக் குழு உறுப்பினருமான தமிழரசன் ஆகியோர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை காத்தல் மற்றும் உறுதி செய்தல் குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல் தடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்துதல் குறித்து விரிவாக பேசினார்கள்.