கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா செக்கணம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் சதீஷ் (33) இவர் தனது வீட்டின் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் புகையிலை விற்ற சதீஷ் மீது இன்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 460 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.