7 அடி நீளம் சாரை பாம்பு, பார்த்த மக்கள் அச்சம்

65பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் உள்ள பாலாஜி நகர் 2 வது குறுக்கு தெருவில் குடியிருந்து வருபவர் விவசாயி பாண்டியன் , இவருக்கு சொந்தமான 2 அடுக்குமாடி அடித்தளத்தில் டீக்கடை நடத்தி வரும் ரகுபதி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

அந்த வீட்டின் கீழ் முன்பக்க கேட்டின் வழியாக உள்ள பாத்ரூம் அருகே சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்து கொண்டதை எதிரே குடியிருக்கும் நபர் பார்த்து ரகுபதியுடன் தெரிவித்துள்ளார். அதனையடுத்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்ற போது அங்கிருந்த பிளாஸ்டிக் குழாய்க்குள் புகுந்து கொண்டது. பிளாஸ்டிக் குழாயுடன் சாரை பாம்பை பிடித்து சாக்கு பை மூலம் காட்டுப்பகுதியில் விட கொண்டு சென்றனர்.

பட்டப் பகலில் குடியிருப்பு வீட்டில் புகுந்த சாரைப் பாம்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி