அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்; ரூ. 72 லட்சம் வழங்கிய எம்.எல்.ஏ.

62பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 34 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கு, தலா ரூபாய் 2,10,000 வீதம், ரூபாய் 71,4000 மதிப்பிலான ஆணைகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திட்டத்திற்கான ஆணைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கும், எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் சசிகுமார், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், அரசு துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி