கரூர் மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 866 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 984. 95 கன அடி நீராக உள்ளது. காவிரி ஆற்றில் கதவணைக்கு வரும் 866 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. போதிய நீர் இருப்பு இல்லாததால் தென்கரை பாசன வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் பாசன நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.