சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது

85பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா டி. இடையபட்டி குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பொன்னுசாமி (42). இவர் இடையபட்டி சுடுகாடு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் மது விற்ற பொன்னுசாமி மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி