கடவூரில் மகாகவி மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு கூட்டம்.

78பார்த்தது
கரூர் மாவட்டம், கடவூர் வடக்கு ஒன்றிய "மகாகவி மாற்றுத்திறனாளிகள் மக்கள் சந்திப்பு சிறப்பு கூட்டம் "மகாகவி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தமிழரசி, நிர்வாக செயலாளர், செல்வி, மகாகவி நிர்வாக மேலாளர் தமிழ்செல்வி, சமூக ஆர்வலர் இன்பென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தங்கதமிழ் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மகாகவி இல்லத்தில் மரக்கன்று நடுவிழா வை திட்டத்தின் பொறுப்பாளர் தமிழரசி தொடங்கி வைத்து, 50 பயனாளிக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமூக ஆர்வலர் லதாவினோத்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை, சுயதொழில், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தார்.


மகாகவி மாவட்ட நிர்வாகம் சார்பில், மகாகவி இசை, நடனம், கலை, விளையாட்டு, மனவலிமை ஊக்குவிப்பு செய்திட நடப்பு ஆண்டு முதல் ரூ. 10. 000 மகாகவி இசை குழவினர்களுக்கு வழங்கிடவும்,

மே மாதம் தொடக்கத்தில் மகாகவி மாவட்ட முப்பெரும் மாநாடு நடத்திடவும்,

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையை இரட்டிப்பு செய்து வழங்கிய தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், பெரும் உதவிகள் புரிந்த கரூர் மண்ணின் மைந்தர் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தும் மூன்று தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி