காக்காவீரியன்பட்டி டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். 3பேர்காயம்

60பார்த்தது
காக்காவீரியன்பட்டி- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயம்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வள்ளியாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அன்னபூரணி வயது 32. அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அம்சவல்லி வயது 30.

இருவரும் அக்டோபர் 8-ம் தேதி காலை 8: 15- மணி அளவில், மைலம்பட்டி- பஞ்சப்பட்டி செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். டூவீலரை அன்னபூரணி ஓட்டினார்.

இவர்களது வாகனம் காக்காவீரியம்பட்டி விளையாட்டு மைதானம் அருகே வந்தபோது,


அருகில் உள்ள முத்து கவுண்டன்பட்டியை சேர்ந்த நிதிஷ்பாபு வயது 24, குளித்தலை அருகே நல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 28 இருவரும் எதிர் திசையில் மற்றொரு டூவீலரில் வேகமாக வந்து, அன்னபூரணி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அம்சவல்லி, அன்னபூரணி, தமிழ்செல்வன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், அன்னபூரணி & தமிழ்ச்செல்வன் ஆகியோரை கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், அம்சவல்லியை கரூர் அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அன்னபூரணி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைசெய்த காவல்துறையினர், டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நிதிஷ் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி