புலியூர் அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது.

55பார்த்தது
புலியூர் அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 18 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.


கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் நான்காம் தேதி மதியம் 2 மணி அளவில் புலியூர் பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, உப்பிடமங்கலம் பிரிவு சாலையில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், துறையூர், தெற்கு தெருவை சேர்ந்த மருதமுத்து வயது 43 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 18 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மருதமுத்து மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி