கிருஷ்ணராயபுரம்: விசிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் அக்டோபர் 2 அன்று உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் சேங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்கிற வன்னியரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநாட்டுக்கு அழைத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பூபதி, பிள்ளபாளையம் சதிஷ், பகவதி லட்சுமி, மாரியம்மாள், வித்யா, ரத்னா, ரூபா, நதியா, நாகலட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி