செங்காடு- சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.

56பார்த்தது
செங்காடு- சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, முள்ளிப்பாடி ஊராட்சி பகுதியில் உள்ளது செங்காடு.

மணப்பாறை- கரூர் பிரதான நெடுஞ்சாலை இப்பகுதி வழியாக செல்கிறது.

கரூர் மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையில் கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டாரத்தில் அதிகப்படியான மழை பெய்தால் கிராமங்களில் உள்ள காட்டு வாரிகளில் நீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது.

மழை நீரானது செங்காடு பகுதியில் இருபுறமும் ஓடை இருந்தும் தண்ணீர் செல்லாமல் நெடுஞ்சாலையை சூழ்ந்து நின்றது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

செங்காடு பகுதியில் மலைச்சாமி என்பவருக்கு 100 மீட்டர் அளவிற்கு பட்ட இடம் உள்ளதால், அவரது இடத்தை பாதுகாக்க மழைநீர் செல்லாதவாறு கரையை உருவாக்கினார்.
அன்றிலிருந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இன்று உடனடி தீர்வாக முள்ளிப்பாடி ஊராட்சி, நெடுஞ்சாலை துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து பொக்லைன் வைத்து தண்ணீரை ஓடையில் திருப்பி விட்டனர்.

மீண்டும் ஒரு பெரு மழை வந்தால் இதே நிலைதான் ஏற்படும். எனவே அதிகாரிகள் ஓடையில் மழைநீர் செல்ல, மலைச்சாமி என்பவர் நிலத்தின் வழியாக கால்வாயோ அல்லது குழாய்கள் அமைத்தோ நீர் வெளியேறுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி