பி. வெள்ளாளப்பட்டியில் பாம்பு கடித்து பெண் உயிர் இழப்பு.

60பார்த்தது
பி. வெள்ளாளப்பட்டியில், புல் அறுக்கும் போது பாம்பு கடித்து பெண் உயிர் இழப்பு.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பி. வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி பூரணம் வயது 45.

ஜூன் 10ஆம் தேதி காலை 7: 30- மணி அளவில்,
பி. வெள்ளாளப்பட்டியில் உள்ள அவர்களது தோட்டத்தில், பூரணம் தான் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று பூரணத்தை கடித்து உள்ளது.

பாம்பு கடித்து வலியால் அலறி துடித்த பூரணத்தை, அவரது கணவர் சுப்பிரமணி மீட்டு, உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு பூரணத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பூரணம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த பூரணத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி