கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா வீரனம்பட்டி அடுத்த விரியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (35). இவர் செவலூர் பகுதியைச் சேர்ந்த வீரக்கவுண்டர் என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்தும் இவருக்கு பின்னால் நாகப்பன் என்பவரும் அமர்ந்து மூன்று பேரும் செவலூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது நாய் திடீரென குறுக்கே வந்ததில் பிரேக் போட்டு மூவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.