தொப்பாரப்பட்டியில் தனியார் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. 10 பேர் படுகாயம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வெள்ளைய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 55 இவர் கரூர் புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியின் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஏப்ரல் ஐந்தாம் தேதி காலை 9 மணியளவில் வழக்கம் போல் கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஈசநத்தத்திலிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் பேருந்து ஓட்டி சென்றார்.
அப்போது தொப்பாரப்பட்டி அருகே வந்தபோது, பேருந்தை வேகமாக இயக்கியதால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இடது புறமாக கவிழ்ந்து விபத்து ஆனது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள் 9- பேரும், டிரைவர் முருகேசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக இவர்களை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி குங்கும பிரீத்தி வயது 17 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை கவனக்குறைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.