கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மனப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று(செப்.18) மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் அரசு துறை அதிகாரியுடன் நேரில் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த பள்ளியில் உள்ளே நுழைந்து மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாணவ மாணவியரிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மணவாடி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.