தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-25 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை இன்று ஆய்வு செய்ய வந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, நஞ்சை புகலூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவனை பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சீனிவாசன், மாங்குடி, மோகன், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது கட்டப்பட்டு வரும் கதவணையின் ஸ்திறத்தன்மை, பணி துவங்கப்பட்ட காலம், இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் போன்றவற்றை ஆய்வு செய்து, கதவணை பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.