கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று தங்களது கிராமத்திற்கு ஆற்றுவாரியில் பாதை அமைத்து தர கோரி 40 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என போக்குவரத்துக் இடையூறாக பள்ளி கல்லூரி வாகனங்களை மறித்து சாலை மறியல் செய்தனர். கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் கேட்காததால் மறியலில் ஈடுபட்ட செந்தில் முருகன், ஜெயலட்சுமி, பாப்பாத்தி, சந்தியா, பாப்பாத்தி மற்றும் சிலர் மீது மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.