சிமெண்ட் ஆலை துகள்களால் பொதுமக்கள் பாதிப்பு அதிகாரிகள் ஆய்வு

68பார்த்தது
சிமெண்ட் ஆலை துகள்களால் பொதுமக்கள் பாதிப்பு அதிகாரிகள் ஆய்வு
கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகில்களும், சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் பரவி வீடுகளில் விழுந்து பொதுமக்கள் அவதிப்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

புகழூர்நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டுக்கு உட்பட்ட மூலிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்கள், சுண்ணாம்பு துகில்கள் காற்றின் வழியாக பறந்து சென்று குடியிருப்பு வீடுகளில் விழுந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலர்ஜியால் உடல்களில் பாதிப்புக்குள்ளாகி, சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் அவதியுற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை துணை பொது மேலாளர் நவநீதன் (நீர் மேலாண்மை),
மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயசீலன், மற்றும் அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் அடங்கிய குழுவினர் மூலிமங்கலம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி