ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை

68பார்த்தது
புகழூரில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை.

கரூர் மாவட்டம், புகலூர் நகர திமுக கட்சி அலுவலகத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக, ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவது, மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புகலூர் நகர செயலாளரும் புகலூர் நகர மன்ற தலைவருமான குணசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் நகர அவைத்தலைவர் வாங்கிலி, நகர துணை செயலாளர் இம்ரான்கான், நகர இளைஞரணி அமைப்பாளர் நந்தா, வார்டு செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி