100 நாள் வேலைத் திட்டம்-100 நாட்களில் வீட்டுக்கு அனுப்புவோம்

57பார்த்தது
100 நாள் வேலைத் திட்டத்தை வைத்து அரசியல் செய்யும் எம் பி ஜோதி மணியை, 100 நாட்களில் வீட்டுக்கு அனுப்பும் வேலையை துவக்கி உள்ளோம். பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காட்டுமுன்னூர் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்துவதில் அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் கவனம் செலுத்தவில்லை. இதேபோல கரூர் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி கடந்த நாலரை வருடங்களாக தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதே சமயம் 100 நாள் வேலைத்திட்டத்தை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று நடைபெற்ற எங்களது கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், இன்னும் 100 நாட்களில் அவரை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைகளை இன்று துவக்கி உள்ளோம் என்ற அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க செய்வது தான் எங்களது முதல் பணி என்றார். .

தொடர்புடைய செய்தி