நம் வீட்டில் சுடும் இட்லி, கடைகளில் கிடைப்பது போல மிருதுவான இட்லியாக இருக்காது. அதற்கு ஒரு தீர்வு உள்ளது. மாவு அரைக்கும் பொழுது அதில் தண்ணீர் தெளித்து அரைக்காமல், ஐஸ் கட்டிகளைப் போட்டு அரைக்க வேண்டும். அப்போது மாவு மிக மிருதுவாக மாறும். இதை இரவு முழுவதும் புளிக்க வைத்து, அடுத்த நாள் காலை இட்லியாக வார்க்கும் பொழுது பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும். இந்த மாவை கொண்டு தோசை சுட்டால் தோசையும் நல்ல முறுவலாக வரும். முயற்சி செய்து பாருங்கள்.!