மாவேலி மன்னர் வேடமணிந்து வீடு வீடாக சென்று ஓணம் வாழ்த்து

60பார்த்தது
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா பண்டிகையில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை இன்று (செப்.,15) கொண்டாடப்படுகிறது.

திருவோணம் பண்டிகை நாளான இன்று (செப்.,15) குமரி மாவட்டத்தில் வீடுகள், கோவில்கள், தெருக்களில் மக்கள் அத்தப் பூ கோலம் போட்டு திருவோணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில்  பிரதர்ஸ் கிளப் சார்பில் இன்று திரு ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

திரு ஓணம் பண்டிகையை முன்னிட்டு குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியில் அத்திப்பூ கோலம் போட்டு ஓண, ஊஞ்சல் கட்டி, சிங்காரி மேளத்துடன் மாவேலி மன்னர் வேடம் அணிந்து புலி களி, கதகளி, தெய்யம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாவேலி மன்னர் வீடு வீடாக சென்று ஓணம் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வானது நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி