பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முருக்கவிளையில் பஞ்சணக்குழி மலை குன்று உள்ளது. இதன் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தனியாருக்கு சொந்தமான இந்த மலையிலிருந்து பாறையை உடைத்து கற்களை லாரிகள் மூலம் கரிக்கி, கப்பயறை, பள்ளியாடி வழியாக செல்லும் சாலை வழியாக கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது,
பொதுமக்கள் பயன்படுத்தும் குறுகலான ஒரு வழி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதோடு அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படும் என்பதால் இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, இருந்தும் அரசின் அனுமதியோடு பாறையை உடைக்கும் முயற்சி நடந்து வருவதை தெரிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி