கழுவன்திட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

52பார்த்தது
திருவட்டார் அருகே
ஆற்றூர் கழுவன்திட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் 26-வது ஆண்டு திருவிழா கடந்த 21. ந்தேதி துவங்கி 
விழா நாட்களில்  நிர்மால்யம், தரிசனம், மிருத்துஞ்சய ஹோமம்,   கலச பூஜை, குங்கும அர்சனை, திருவிளக்கு பூஜை,   பஜனை, சுதர்சன ஹோமம்,   சுதர்சன ஹோமம்,   நாகரூட்டு, புஷ்பாபிஷேகம் , இன்னிசை விருந்து, அன்ன தானம் , நடன நிகழ்ச்சி, சமூக நாடகம் ஆகியன நடந்தது 
ஆறாம் நாளான இன்று நாதஸ்வரம், நையாண்டி மேளத்துடன் அம்மன் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி திருப்பாதக்கடவு, ஆதிகேசவப்பெருமாள் கோவில், தளியல் முத்தாரம்மன் கோவில்,   விளாக்கோடு, திருவட்டார், மூவாற்றுமுகம், சானல்கரை, புளியமூடு, உலவச்சிவிளை, உத்திரம் விளை வழியாக சென்று கோவிலுகுத்திரும்புதல், அன்னதானம்  மணிக்கு பறக்கும் காவடி,   தேர்க்காவடி, கதிர்வேல் காவடி, கன்னவேல் என வேல் காவடி தரிக்கும் நிகழ்ச்சி, மூவாற்று முகம் ஆற்றுக்கு பூநீர் எடுக்கச்செல்லுதல்,   முத்துக்குடை, தாலப்பொலி, வேல்காவடி, அலங்கார வாகனங்களுடன் கழுவன் திட்டை, திருவட்டார், உத்திரம் விளை வழியாக பூநீர் கும்ப பவனி  கோவிலுக்குத் திரும்புதல் , அம்மன் பூக்குழி இறங்குதல், மகா தீபாராதனை ஆகியன நடந்தது.

தொடர்புடைய செய்தி