ரூ.187 ஐஸ்கிரீமுக்கு ரூ.5000 இழப்பீடு..!

61பார்த்தது
ரூ.187 ஐஸ்கிரீமுக்கு ரூ.5000 இழப்பீடு..!
பெங்களூருவில் ஆன்லைனில் சாக்லேட் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு அதை டெலிவரி செய்யத் தவறிய ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் ஐஸ்கிரீம் தொகையான ரூ.187-யும் சேர்த்து வாடிக்கையாளருக்கே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது, ஆப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக காட்டியபோதும் இவருக்கு ஐஸ்கிரீம் வந்து சேராததால் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது இழப்பீடு பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி