கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (45 ) , பிசியோதெரபிஸ்ட், திருமணமாகவில்லை, இவருக்கு தாய், தந்தையர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவருக்கு சகோதரி ஒருவர் உண்டு, அவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு பிசியோ சிகிச்சை அளித்து வந்தார். இவர் இந்நிலையில் நேற்று மாலை களியக்காவிளை அடுத்த கோழிவிளை அரசு மதுபான கடையில் உள்ள பாரில் நண்பர் ஒருவருடன் மதுபானக் கடைக்கு புத்தாண்டு கொண்டாடச் சென்றுள்ளார்.
அப்போது புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடை மற்றும் மதுபான பார் ஆகியவை நிறைந்து மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. குமரி- கேரளா எல்லை பகுதியான கோழிவிளை மதுபான கடை மற்றும் மது பான பார் எப்போதும் கூட்டமிகுதியால் பரபரப்பாக காணப்படுவது வழக்கம், சுனில் நண்பருடன் மது அறிந்து கொண்டிருந்துள்ளார். இருவருக்கும் பணியாளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மோதலாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட மதுபான பார் பணியாளர் சங்கரன்(46) என்பவர் ஆத்திரம் கொண்டு அவரை கத்தியால் வயிற்றில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.