குமரி: விவசாய பாதிப்புகளை முறையாக சேகரிக்க வலியுறுத்தல்

65பார்த்தது
குமரி: விவசாய பாதிப்புகளை முறையாக சேகரிக்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட நீர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று (10-ம் தேதி) நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் கிங்ஸிலி தலைமை வகித்தார். மாவட்ட பாசனத் துறை தலைவர் வின்ஸ்  ஆன்றோ முன்னிலை வகித்தார். மற்றும் உதவி பொறியாளர்கள், தோவாளை தாசில்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தோவாளை கால்வாய் உடைப்பால் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட புள்ளிவிவரத்தில் 550 ஏக்கர் தான் பாதிப்பு என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோவாளை கால்வாய் உடைப்பால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு  விபரங்களை முறையாக சேகரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி