அரசு பள்ளியில் பாட புத்தகங்கள் விநியோகம்

71பார்த்தது
அரசு பள்ளியில் பாட புத்தகங்கள் விநியோகம்
கன்னியாகுமாரி மாவட்டம்
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு, மற்றும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்துப் பேசினார். பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நயிமா, கிராம கல்விக் குழு தலைவர் சி. சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி உறுப்பினர் மு. ரிபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், பள்ளியின் முன்னாள் மாணவருமான பத்மநாபபிள்ளை மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
இதில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் அவசியம், அரசின் திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
.

தொடர்புடைய செய்தி