கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை

2977பார்த்தது
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அம்மாநில கால்நடை மருத்துவர்கள் அதிரடி ஆய்வு மேற்கண்டனர். ஆய்வில் வாத்து கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு 18,000 வாத்து கோழிகள் அளிக்கப்பட்டது,

இந்நிலையில் குமரி மாவட்ட எல்லை பகுதியான படந்தாலுமூடு சோதனைச் சாவடி அருகாமையில் , கால்நடைத்துறை ஏடி சுப்பிரமணியம் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு கேரளாவில் இருந்து களியக்காவிளை வழியாக குமரி மாவட்டத்திற்குள் வரும் கால்நடை வாகனங்கள், கோழி ஏற்றிச்சென்று திருப்பி வரும் வாகனங்கள் எல்லையில் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

தமிழகத்திலிருந்து கால்நடைகள், கோழிகள் ஏற்றி செல்லும் வாகனங்களை செல்ல தடை இல்லை, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் டயர்களிலும் , வாகனங்களிலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி