எல்லோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை எஸ். பி

56பார்த்தது
எல்லோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை எஸ். பி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் அரங்கத்தில் வைத்து நேற்று பாராளுமன்ற தேர்தல் குறித்து இருமாநில எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த இருமாநில காவல்துறை உயிரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டத்தில் வைத்து நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுத்தரவதனம் மற்றும் திருவனந்தபுரம் எஸ். பி கிரண் நாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரு மாநில எல்கைகளில் உள்ள குற்றவழக்குகள் குறித்தும் தலைமறைவான குற்றவாளிகள் குறித்தும் ஆலோசிக்கபட்டது
மேலும் திருவனந்தபுரம் எஸ்பி கிரண் நாராயணன் கூறுகையில் கொல்லம் குழந்தைகடத்தல் விவகாரத்தில் குழந்தையை மீட்க உதவிய தமிழக காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் பணிகளில் தமிழகம் கேரளா என்றல்லாமல் இந்தியா என்ற ஒற்றை குடையின் கீழ் இயங்கவேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கபடும் எனவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி