விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிகவின் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 தேர்தல் கூட்டணி குறித்து பதிலளித்த விஜய பிரபாகரன், "விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கி தேர்தலில் 12% வாக்குகள் பெற்று அரசியலில் தன்னை நிரூபித்தார். அதே போல் விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும். விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவருடன் கூட்டணி வைப்பதா இல்லையா என தேமுதிக முடிவு செய்யும்" என்று பேட்டியளித்துள்ளார்.